அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டி படுகொலை... 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை!
சமீபகாலங்களாக தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம், வண்டிபாளையம் பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், வண்டிபாளையம் அதிமுக முன்னாள் கவுன்சிலரான புஷ்பநாதன் என்பவர் கடந்த ஜூன் 28ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புஷ்பநாதனின் உறவினர்களும், ஆதரவாளர்களும், படுகொலை செய்து விட்டு தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த கொலையில் ஈடுபட்ட சந்தோஷ், நேதாஜி, அஜய், உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!