இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ2500/- அதிரடி அறிவிப்பு!!

 
பணம்

இந்தியாவில் தெலங்கானா, ராஜஸ்தான் உட்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது . அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகின்றன. அந்த வகையில்  119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே  அறிவிக்கப்பட உள்ளன. இதனையடுத்து   அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இல்லத்தரசிகள்

அங்கு  காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.   திருமணத்திற்கு மணப்பெண்ணுக்கு 10கிரம்   தங்கம், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் மாணவர்களுக்கு இலவச இண்டர்னெட் வசதி,  பெண்களுக்கு மாதம் ரூ.2,500 , ரூ.500 க்கு எல்பிஜி சிலிண்டர், மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.  மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 6 மாதங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் அரசு திட்டங்களில் நியாயமான இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்


 சிறுபான்மையினருக்கு வீடு கட்டுவதற்கு நிலம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் வழங்கப்படும்.  வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் சிறுபான்மையின இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வழங்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,000 கோடி வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
முதுநிலை பட்டப்படிப்பு  மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். மேலும்  பட்டப்படிப்பு முடித்தவுடன் ரூ.25,000, இடைநிலை வகுப்புகள் முடித்தவுடன் ரூ.15,000, மெட்ரிகுலேஷன் முடித்தவுடன் ரூ.10,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web