சிக்கிய எஸ்கேப்பான தண்டனை கைதி.. அலட்சியமாக செயல்பட்ட 4 போலீசார் சஸ்பெண்ட்!

 
பாபு அகமது ஷேக்

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள ரயில்வே  அருகே பாபு அகமது ஷேக் (55) சுற்றித் திரிந்தார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். 2021 ஆம் ஆண்டு காட்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே ஒரு பிச்சைக்காரரை அடித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை பெற்ற பாபு அகமது ஷேக், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். குடல் அடைப்பு சிகிச்சைக்காக பிப்ரவரி 15 ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கைதி

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாபு அகமது ஷேக் நேற்று அதிகாலை   அங்கு இருந்து தப்பிச் சென்றார். பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டாம் நிலை காவலர் கோகுல் அளித்த புகாரின் பேரில், வேலூர் கிராமப்புற போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். தலைமறைவான பாபு அகமது ஷேக்கைப் பிடிக்க இரண்டு சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையில், வேலூர் அருகே சித்தேரி ரயில் நிலையம் அருகே உள்ள செங்கல் சூளை புதர்களில் பதுங்கியிருந்த பாபு அகமது ஷேக்கை நேற்று சிறப்புப் படையினர் கைது செய்தனர்.

சஸ்பெண்ட்

இதேபோல், மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக இருந்ததற்காக வேலூர் ஆயுதப்படை காவல் படை தலைமைக் காவலர் பொற்கை பாண்டியன் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களான கோகுல், சத்தியமூர்த்தி, கண்ணன் ஆகியோரை இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web