மகளிர் பணிபுரியும் விடுதிகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

 
தோழி விடுதி

 சென்னையில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இங்குள்ள தலைமை செயல் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து  தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹாஸ்டல்

அதில்  "பணிபுரியும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகளை செயல்படுத்தி சமூக நலத் துறையின் கீழ் சிறப்பு நோக்கத்திற்கான திட்டம் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற பெயரில் இந்த முயற்சி பிப்ரவரி 6, 2020 முதல் இத்திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

 புதிய விடுதிகளை உருவாக்குவதும், தற்போதுள்ள பணிபுரியும் பெண்கள் விடுதிகளை மேம்படுத்துவதும்,அனைத்து பிரிவு மகளிரும் பயனடையும் வகையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் சென்னை தலைமை அலுவகத்தில் பின்வரும் காலி பணியிடம் உடனடியாக நிரப்பப்பட உள்ளது.  

தோழி தங்கும் விடுதி
பதவி பெயர்  : தலைமை செயல் அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1  
விண்ணப்பத்தைப் பெறுவதற்கான காலக்கெடு 05.12.2024 மாலை 5.00 மணி வரை. 
இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான  www.tnwwhcl.in இணையதளத்தில் விரிவாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது."  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web