சிலு சிலு சாரல் காற்று!! யானைகள் கூட்டமாக அட்டகாசம்!!

 
சிலு சிலு சாரல் காற்று!! யானைகள் கூட்டமாக அட்டகாசம்!!

தமிழகம் முழுவதுமே பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குற்றால சாரல் காற்றும், பருவ மழையும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வேறு பிரச்சனையை உருவாக்கியுள்ளது.

சிலு சிலு சாரல் காற்று!! யானைகள் கூட்டமாக அட்டகாசம்!!

குற்றால சீசனை அனுபவிக்க மக்கள் கூட்டமாக கூடுவதைப் போல, தற்போது மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் கிராமங்களில் யானைகள் கூட்டமாக சாரல் காற்றை அனுபவித்தப்படியே அட்டகாசம் செய்கின்றன. தென்காசியை அடுத்த ஆயிரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சானாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து தென்னை மரங்களை கீழே சாய்த்து அட்டகாசம் செய்துள்ளன.

சிலு சிலு சாரல் காற்று!! யானைகள் கூட்டமாக அட்டகாசம்!!

இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். யானைகள் கூட்டம் கூட்டமாக திடீரென இப்படி வந்து அட்டகாசம் செய்வதால், அந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் அச்சமும்,வேதனையும் அடைந்துள்ளனர். விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் யானை கூட்டங்களை விரட்டவும் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் தென்காசி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web