நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது... தமிழகத்தில் டோல் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நேற்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் டோல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது அமலுக்கு வந்தது.தமிழகத்தில் கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பலரும் தங்களது சொந்த வாகனங்களில் வெளியூர் சென்றிருந்த நிலையில், விடுமுறை முடிந்து நேற்று இரவு முதல் மீண்டும் சொந்த ஊரிலிருந்து கிளம்பியவர்கள் இந்த டோல் கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் சுங்க சாவடி கட்டனம் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஏப்ரல் 1ம் தேதி முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதுமாகவே சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சி உள்ள 38 சுங்கச்சாவடிகளில் 2ம் கட்டமாக செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!