ஊட்டி, கொடைக்கானல் செல்ல புதிய கட்டுப்பாடுகள்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

 
வாகனங்கள்

 
தமிழகத்தில் பல பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல இப்போதே திட்டமிட்டு வருகின்றனர்.  அந்த வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு ஏராளமான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அங்கு பசுமை நிறைந்து காணப்படுவதால் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்கும் நோக்கத்தில் சுற்றுலா வாகனங்களுக்கு  கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல்


அதன்படி, ஊட்டிக்கு வார நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8,000 சுற்றுலா வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும். அதேபோல், கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
அரசு பேருந்து, ரயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.  உள்ளூர், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் கட்டுப்பாடும் இல்லை.  இந்த கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் எனவும்   ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

கொடைக்கானல் மலர் கண்காட்சி


குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கு இ – பாஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும்,  ஊட்டி, கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இருந்து மினி மின்சார பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலிணை செய்ய வேண்டும் எனவும்  சென்னை உயர் நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. இதனிடையே, ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்த வழக்கு ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web