குடிபோதையில் தகராறு.. மகளை கோடாரியால் வெட்டிக் கொலை.. தலைமறைவான தந்தைக்கு வலைவீச்சு!

 
கொலை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மோச்சேரி குளக்கரையை சேர்ந்தவர் கோபால் (வயது 65). இவர் ஒரு கூலித்தொழிலாளி. கோபாலின் மனைவி சரஸ்வதி. முதல் கணவர் இறந்த பிறகு, சரஸ்வதி கோபாலை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சரஸ்வதிக்கு முதல் கணவர் பார்த்தீபன் (வயது 35) என்ற மகன் உள்ளார். இவர் சோத்துப்பாக்கம் பகுதியில் உள்ள லாரி ஷெட்டில் வேலை செய்து வருகிறார். கோபாலும், சரஸ்வதியும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

கொலை

கோபால் - பார்த்தீபன் ஒன்றாக மது அருந்தும் பழக்கமுடையவர்கள், இருவரும் குடிபோதையில் அவ்வப்போது தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சரஸ்வதி அவர்களை சமாதானம் செய்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபால், சரஸ்வதி இடையே தகராறு ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த சரஸ்வதி சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அவரை வீட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு இருவரும் போதையில் இருந்தனர். அப்போது சரஸ்வதியை அழைத்து வருவதில் தகராறு ஏற்பட்டது.

போலீஸ்

ஒரு கட்டத்தில் பார்த்திப்பனை கோபால் தாக்கியுள்ளார். இருவரும் கோபத்தில் சாப்பிடாமல் தூங்கினர். அப்போது அதிகாலை 3 மணியளவில் கண்விழித்த கோபால், மகன் மீது கோபம் தாளாமல் கோடாரியை கொண்டு வந்து தூங்கி கொண்டிருந்த பார்த்தீபனை தாக்கினார். இதில் பார்த்தீபன் தலை, கழுத்து, மார்பில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். மகனைக் கொன்ற கோபால் தலைமறைவாக இருந்த நிலையில், காலையில் அக்கம் பக்கத்தினர் வந்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் பார்த்தீபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான கோபாலை தேடி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web