குடிபோதையில் தாய், மகளை அவதூறாக பேசி கொலை மிரட்டல்... 2 பேர் கைது!
பழையகாயல் அருகே பைக் மீது அமர்ந்து தகராறு செய்து தாய், மகளை தாக்கியதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகே புல்லாவெளி கிழக்குத் தெருவைச் சேர்ந்த முத்துமகேஷ் மகள் உஷாமேரி (21). இவர், தனது வீட்டு முன் பைக்கை நிறுத்ததாக கூறப்படுகிறது.
மது போதையில் வந்த ராமச்சந்திராபுரம் தெற்குத் தெரு வேல்சாமி மகன் செல்வன் (23), பழையகாயல் வடக்குத் தெரு சுடலைமணி மகன் ராஜேஷ் (23) ஆகியோர் உஷாமேரியின் பைக் மீது அமர்ந்து தகராறு செய்தனராம்.
இது தொடர்பாக கேட்ட உஷாமேரி, அவரது தாய் ஆகியோரை இருவரும் சேர்ந்து அவதூறாகப் பேசித் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து, செல்வன், ராஜேஷ் ஆகியோரைக் கைது செய்தனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!