மிரண்டு நின்ற போலீசார்... வகைவகையாக தரம் பிரித்து 80 தொட்டிகளில் வீட்டிற்குள்ளேயே கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞர்!

 
ராகுல் சவுத்ரி

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனது குடியிருப்பில் சுமார் 80 கஞ்சா செடிகளை வளர்த்த 46 வயது ராகுல் சவுத்ரியை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு நொய்டாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தபோது ராகுலின் தந்தை இறந்தார். இதனால் ராகுலுக்கு சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் காவல் துறையில் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அந்த போலீஸ் தேர்வில் அவர் வெற்றி பெறவில்லை.

இதையடுத்து வியாபாரம் செய்த ராகுலுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்க ராகுல் கஞ்சா புகைக்க ஆரம்பித்தார். பின்னர் தனது தேவைக்காக வீட்டில் கஞ்சா வளர்க்க ஆரம்பித்து பின்னர் அதையே தொழிலாக மாற்றினார். நொய்டாவில் உள்ள தனது வீட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து ஆன்லைனில் வெப் சீரிஸ்களை பார்த்து கஞ்சா விதைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து, வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளார் ராகுல்.

லைட் மற்றும் ஏசியுடன் சுமார் 80 தொட்டியில் கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்துள்ளார். இந்நிலையில்,  வீட்டில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்த போலீசார், ராகுலை கைது செய்து சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்தனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web