போதையில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... ரயில் நிலையத்தில் அதிர்ச்சியளித்த குற்றப்பிரிவு காவலர்!
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில், இளம் பெண்ணிடம் மது போதையில் குற்றப்பிரிவு காவலர் அத்து மீறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை ரயில் நிலைய நடை மேடையில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி இளம்பெண் மென் பொறியாளர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த வழியே மது போதையில் சாதாரண உடையில் சென்ற நபர், தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு சம்பந்தப்பட்ட பெண் மென்பொறியாளரிடம் எல்லை மீறியதாகக் கூறப்படுகிறது.
அவரது செய்கையால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இது குறித்து ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். இந்த விவகாரம் குறித்து அறிந்த சென்னை காவல் ஆணையர் அருண் இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, தென் சென்னை காவல் இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக்குமார் மேற்பார்வையில் சைதாப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.
இதில், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் குடிபோதையில் அத்து மீறியது சைதாப்பேட்டை குற்றப் பிரிவு காவலர் கமலக்கண்ணன் என்பது தெரிய வந்தது. சம்பவம் நடந்த நேரத்தில் அவருக்கு அங்கு பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதும் உறுதியானது. இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான காவலர் கமலக் கண்ணனை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா