வாகன ஓட்டிகளே உஷார்... ஹெல்மெட் போடலன்னா டிரைவிங் லைசன்ஸ் ரத்து... உடனடி அமல்!

 
போக்குவரத்து தடை

 இந்தியா முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம். ஆனால் பெரும்பாலானோர் இதனை செயல்படுத்துவது கிடையாது.   இதன் காரணமாக இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதை குறைக்க வேண்டும் என்பதற்காக, ஹெல்மெட் விதிமுறையை அரசு தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.  

போக்குவரத்து மாற்றம்
இதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் நகரில்,  துணை போக்குவரத்து கமிஷனர் ராஜ ரத்தினம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி, இனி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அத்துடன் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என  உத்தரவிட்டுள்ளார்.
ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வது சாதாரணமான ஒரு விஷயம். இதற்காக இவ்வளவு கடுமையான நடவடிக்கை தேவையா? என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.  ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்கின்றனர்  சமூக ஆர்வலர்கள்.  நடவடிக்கைகள் கடுமையாக இல்லாததால் தான், நிறைய பேர் விதிமுறைகளை மீறுவதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.  

போக்குவரத்து

சாலை போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் நாடுகளில், சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹெல்மெட் விதிமுறையுடன் சேர்த்து, அனைத்து போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றினால், இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைத்து விடலாம்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web