ஒரே மேடையில் ஜனாதிபதியுடன் மோடி, கார்கே, ராகுல் காந்தி... !

 
மோடி

  
இந்தியாவில் 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு 1950 ஜனவரி 26 முதல் இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்தது.  அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26ம் தேதி ஒவ்வொரு ஆண்டும்  அரசியல் சாசன தினமாக  கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று 75வது அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அலுவல் பணிகள் இன்று ஒரு நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

திரௌபதி முர்மு

இன்று பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இந்த இந்த நிகழ்வு அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில்   குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர்  மோடி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜு மற்றும் பலர் இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திரௌபதி முர்மு


இந்நிகழ்வில் பேசிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் 15 பெண் உறுப்பினர்கள் முக்கிய பங்காற்றினார் என நினைவூட்டினார்.  மேலும், பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நமது ஜனநாயகத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது எனவும்,  இந்திய அரசியலமைப்பு என்பது ஒரு முற்போக்கு ஆவணம் எனவும்  அரசியலமைப்பு தின நிகழ்வில் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.  இந்நிகழ்வில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் மட்டுமே பேச இருப்பதாகக்  கூறப்பட்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சி சார்பிலும் பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.  தற்போது வரையில் அனுமதி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web