சுனிதா வில்லியம்ஸை மீட்க சென்றது டிராகன் விண்கலம்.. விரைவில் பூமிக்கு திரும்பும் வீரர்கள்!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு விண்வெளி வீராங்கனை புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் 5 ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். அங்கு ஆய்வு செய்து வருகின்றனர். இருவரும் ஆராய்ச்சியை முடித்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு மற்றும் வாயு கசிவும் கண்டறியப்பட்டது.
இதன் விளைவாக, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கோளாறு சரி செய்யப்பட்ட பிறகும், ஸ்டார்லைனர் விண்கலத்தில் இருவரையும் மீண்டும் பூமிக்கு கொண்டு வர வேண்டாம் என்று நாசா முடிவு செய்தது. அதன்படி, ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளி வீரர்கள் இல்லாமல் கடைசி நாளான கடந்த 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமியை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.
விண்கலம் சுமார் 6 மணி நேரம் பயணம் செய்து மறுநாள் 12.10 மணிக்கு பூமியை அடைந்தது. இதற்கிடையில், 120 நாட்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்க நாசா டிராகன் விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹியூஸ் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்பனோவ் ஆகியோருடன் டிராகன் விண்கலம் இன்று புறப்பட்டது. இருக்கைகள் காலியாக உள்ளதால், சுனிதாவும், வில்மோரும் பூமிக்கு திரும்ப உள்ளனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!