வரதட்சணை கொடுமை... காவல்துறை கண்முன்னே கணவனை வெளுத்து வாங்கும் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை!

 
வரதட்சணை கொடுமை... காவல்துறை கண்முன்னே கணவனை வெளுத்து வாங்கும் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை!  

பிரபல இந்திய பெண் குத்துச்சண்டை வீரர்  சாவீட்டி போரா. இவர்  உலக சாம்பியன்ஷிப் தங்கப்பதக்கம் வென்றவரும் கூட. சாவீட்டி போரா, தன் கணவர் தீபக் நீவாஸ் ஹூடாவை போலீசார் முன்னிலையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி ஹரியானாவின் ஹிசார் போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தில், சாவீட்டி போரா தனது கணவர் மற்றும் இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டனான ஹூடாவை கைகளால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியான நிலையில் சாவீட்டி தனது கணவர் மீது  புகார் கொடுத்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சாவீட்டி போரா  பிப்ரவரி மாதம் தனது கணவர் வரதட்சணை  கேட்டு தன்னை துன்புறுத்துவதாக ஹிசார் போலீசில் புகார் அளித்திருந்தார். ஆனால் 45 நாட்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும்,  அதற்கு பதிலாக தன்னை, தந்தை மகேந்தர் சிங் மற்றும் மாமனார் சத்யவானை போலி புகாரில் குற்றவாளிகளாக பதிவு செய்துவிட்டதாகவும் சாவீட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

 

மேலும், திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன் ரூ2.5 கோடி மதிப்புள்ள மெர்சிடீஸ் காரை வற்புறுத்தி கேட்டதாகவும்,   அவரது தந்தை கடனை வாங்கி ஃபார்ச்சூனர் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.   2022ம் ஆண்டு ஹூடாவின் தொல்லையால் தான் தற்கொலை முயற்சி செய்ததாகவும் சாவீட்டி கூறியிருக்கும்  நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர  விசாரணை நடைபெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web