மைக்ரோசாப்ட், ஸ்விக்கி , பேடிஎம் வரிசையில் விப்ரோவில் ஆட்குறைப்பு.. கதறும் ஊழியர்கள்... !
தொழில்நுப்ட வளர்ச்சியால் ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. விப்ரோ இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. பொருளாதார சரிவு பிரச்சனைகளால் பல்வேறு முண்ணனி நிறுவனங்கள் பணிநீக்கம் குறித்த அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றன. நிதி பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கும் பெருநிறுவனங்கள் செலவுகளை குறைக்கும் வகையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. 2023ல் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது
2024 தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, 100க்குக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்ட்டுள்ளது. இந்தியாவின் டாப் 4 ஐடி சேவை நிறுவனங்களில் விப்ரோ மிகக் குறைந்த லாபத்தையே பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளது. டிசம்பர் மாத காலாண்டை பொறுத்தவரை டிசிஎஸ், இன்போசிஸ் , ஹெசிஎல் நிறுவனங்களை காட்டிலும் மிகக் குறைவான அளவே விப்ரோ லாபம் பெற்றுள்ளது. அதாவது விப்ரோ நிறுவனத்தின் மார்ஜின் அளவு 16 சதவீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விப்ரோ செய்தி தொடர்பாளர் " சந்தை சூழலுக்கு ஏற்ப நிறுவனத்தின் சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற நிறுவனங்களை காட்டிலும் விப்ரோவும் கொரோனாவுக்கு பிறகு, மந்தநிலையில் இருந்தது. எனவே, அதனை சீர் செய்யும் நோக்கில், சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது " என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, விப்ரோ நிறுவனம் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. வர்த்தக சரிவை சீர்செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் 10000 ஊழியர்களையும், ஸ்விக்கி மற்றும் பேடிஎம் நிறுவனம் 400க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது. பல ஐடி நிறுவனங்கள் செலவு குறைப்பு நடவடிக்கையாக ஊழியர்களுக்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க