குழந்தை பிறப்பில் சந்தேகம்.. கலெக்டர் அலுவலகத்தில் மோதிக்கொண்ட கணவன் - மனைவி!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பகுதியைச் சேர்ந்த தீன தயாளனுக்கும், பாரதி பிரியாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. தற்போது இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவருக்கு குழந்தை தனக்கு பிறக்கவில்லை என சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மனைவி தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த புகார் காஞ்சிபுரம் சமூக நலத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமைந்துள்ள சமூக நல அலுவலகத்தில் இரு தரப்பிலும் விசாரணை நடைபெற்றது.
விசாரணைக்கு பின் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தீனதயாளனை பெண் வீட்டார் செருப்பால் அடித்து தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டது தெரியவந்துள்ளது. குடும்ப பிரச்னை குறித்து பேசாமல் இருதரப்பினரும் தாக்கிய சம்பவம், அங்கிருந்து வரும் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, இரு தரப்பிலும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு, புகார்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கணவன்-மனைவி இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு சமூக நலத்துறை மூலம் தீர்வு காண்பதும் வழக்கம். தற்போது தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இரு தரப்பினரும் தெரிவித்தனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா