இனி கவலையில்லை... உலக நாடுகளில் இந்தியா டாஃப்! ஐஎம்எப்ன் புதிய கணிப்பு!

 
வளர்ச்சி ஜிடிபி இந்தியா முன்னேற்றம்

சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) ஜனவரி மாதத்துக்கான தனது பொருளாதார கணிப்புத் தொடர்பான புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.  அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி 2023-24ல் 2.9 சதவீதமாக இருக்கும்.  கடந்த ஆண்டில் இது 3.4 சதவீதமாக இருந்தது.  வரும் ஆண்டில் இந்த வளர்ச்சி 3.1 சதவீதமாக இருக்கும்.  அதாவது, 2024-25ல் வளர்ச்சி 3.1 சதவீதமாக இருக்கும்.

imF ஐஎம்எப் ஜிடிபி

இந்த நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும்.  சீனாவின் வளர்ச்சி 5 சத வீதத்துக்கும் குறைவாகவே இருக்கும்.  ஆனால், ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார சக்தியான சீனா, 3வது இடத்தில் உள்ள இந்தியா ஆகிய 2 நாடுகளும் சேர்ந்து, சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் 50 சதவீதத்தைக் கொண்டுள்ளது.  

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பிற நாடுகள், சேர்ந்து உழைத்தாலும், இந்தியா, சீனாவின் பங்களிப்பை எட்டுவது கடினம். காரணம், இந்த 2 நாடுகளும் உலக வர்த்தகத்தில் தங்கள் மிகப் பெரிய பங்களிப்பை கொடுக்கத் தொடங்கியுள்ளன.  அதிலும், இந்தியாவின் நிலை மிகவும் பிரகாசமாக உள்ளது.  

நிர்மலா சீதாராமன் ஜிடிபி

உலகளாவிய பொருளாதார மந்தநிலை, அடுத்த ஆண்டு குறையும் என்று எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளது. ஆக ஆக நான் நன்றாக வளர்கிறேனே மம்மி என்று நாம்  நிஜமாகவே காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா ஒளிர்கிறது. இந்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். பிரதமர் மோடி நேற்றைய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சாமானியர்களின் விருப்பங்கள் இந்த பட்ஜெட்டில் நிறைவேறும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web