“ரஜினி குறித்த நகைச்சுவை பேச்சை பகைச்சுமையாய் மாற்றாதீங்க” அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்!

 
“ரஜினி குறித்த நகைச்சுவை பேச்சை பகைச்சுமையாய் மாற்றாதீங்க” அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்!

“ரஜினி குறித்த எனது நகைச்சுவையை பகைச்சுமையாய் யாரும் மாற்ற வேண்டாம்"  என்று நீர்வளர்துறை அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அமைச்சர் எ.வ.வேலுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “திமுகவில் சீனியர்கள் வகுப்பை விட்டு வெளியே செல்ல மறுக்கிறார்கள். அதிலும் கலைஞர் கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவர் துரைமுருகன்” என்று பேசியது அரங்கத்தில் அமர்ந்திருந்த முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரையும் ரசிக்க வைத்தது. ரஜினியின் இந்த பேச்சுக்கு  அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.  சற்று இடைவெளி விட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து 'ஹேட்ஸ் ஆப் யு' என்றார் ரஜினி. விழாவில் பேசிய முதல்வரும், ரஜினியின் அறிவுரையை எடுத்துக் கொள்வதாகவும், தான் ஜாக்கிரதையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ரஜினியின் இந்த பேச்சு வைரலான நிலையில், நேற்று வேலூரில் நடைபெற்ற கிருபானந்த வாரியார் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினியின் கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், “பல்லு போய், தாடி வளர்ந்து சாகிற வயதில் வயதானவர்கள் எல்லாம் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது” என்று கூறியிருந்தார்.

அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த இந்தக் கருத்து பலரையும் முகம் சுளிக்க வைத்து, சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்களையும், சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்வர் துரைமுருகனின் பேச்சால் கடும் அப்செட்டில் இருந்ததாகவும், உடனடியாக துரைமுருகன் ரஜினியை போனில் தொடர்பு கொண்டு தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, துரைமுருகன் தனது நீண்ட நாள் நண்பர். அவர் என்ன பேசியிருந்தாலும் தனக்கு வருத்தமில்லை என்றும், நட்பு தொடரும் என்றும் கூறியிருந்த நிலையில், வேலூர் விஐடியில் இன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், நிகழ்ச்சியின் நடுவில் செய்தியாளர்களுடன் பேசுகையில், "ரஜினி குறித்த எனது நகைச்சுவையை பகைச்சுமையாக யாரும் மாற்ற வேண்டாம்" என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web