மிஸ் பண்ணாதீங்க... இன்று முதல் வானத்துல ரெண்டு நிலா... நவ.25 வரை வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

 
பூமிக்கு புதிய நிலா
இன்று இரவு மிஸ் பண்ணாதீங்க. மறக்காம உங்களுடைய குழந்தைகளுக்கும் காட்டி அறிவியலை அறிமுகப்படுத்துங்க. இன்று செப்டம்பர் 29ம் தேதி முதல் நவம்பர் 25ம் தேதி வரை வானத்துல 2 நிலாக்கள் இருக்க போகுது. நினைச்சுப் பார்த்தாலே செம த்ரில்லா இருக்கு இல்லையா? ஆமாம்... நிஜமாகவே 2 நிலாக்கள் தெரியப் போவதாக நாசா சொல்லியிருக்கு. 

இத்தனை வருஷங்களா இல்லாம அதெப்படி ஒரே நேரத்தில் இரண்டு நிலா வரும்? சரி.. அப்படி இருந்தால் தான் எப்படியிருக்கும்? அப்படியொரு அனுபவம் கிடைக்கப்போகிறது என்கிற தகவல் சிலிர்க்க வைத்திருக்கிறது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, பூமியைச் சுற்றி வரும் விண்கற்கள் மற்றும் பொருட்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில், தற்போது 34,725 வான் பொருள்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், '2024 பி. டி.5' என்ற சிறிய சிறுகோள் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, வரும் மாதங்களில் பூமியைச் சுற்றி வர உள்ளது. எனவே, இந்த விண்கல் பூமியின் "இரண்டாவது நிலவு" என்று விவரிக்கப்படுகிறது.

பூமி கோள்

நாசாவின் கணிப்பின்படி, '2024 பி. D.5' விண்கல் நாளை செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரை பூமியைச் சுற்றி வரும், சந்திரனைப் போன்ற நிழல் நிலவாக மாறும். நமது விண்வெளி ஆய்வில் இது ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த தனித்துவமான சூழ்நிலையை நாசா மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற விண்வெளி ஏஜென்சிகள் ஆய்வு செய்து வருகின்றன.

பூமி

பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் விண்கற்களின் இயக்கம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது பற்றிய தகவல்களை இந்த நிகழ்வு விஞ்ஞானிகளுக்கு வழங்கும். 2024 பி. D.5' போன்ற விண்கற்கள் சந்திரனைச் சுற்றி வருவதைப் பார்ப்பது அவ்வளவு பொதுவானதல்ல, இது புதிய அறிவியல் தகவல்களைப் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web