நம்பாதீங்க.. . அவங்க சொல்றதில உண்மையில்ல... அதானி திட்டவட்டம்!

 
அதானி

 அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது ஒரு மிகப்பெரிய குற்றசாட்டை முன்வைத்தது. முதலீட்டாளர்களை ஈர்க்க பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி செயல்படுகிறார் என தெரிவித்துள்ளது.  இதனையடுத்து, இந்திய பங்குசந்தையில் அதானி குழுமம் மிகப்பெரும் சரிவைச் சந்தித்தது.தற்போது அதேபோல மீண்டும் ஒரு அமெரிக்க குற்றசாட்டை அதானி குழுமம் எதிர்கொண்டுள்ளது.  இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமம் மொத்தமாக 10% வரை சரிவை கண்டுள்ளது.

அதானி

அதுமட்டுமல்லாது, அதானி குழுமம் மீது முதலீடு செய்த எல்ஐசி, ஐசிஐசிஐ நிறுவனங்கள் கூட பெரும் சரிவை கண்டுள்ளன.
அமெரிக்க வழக்கறிஞர்கள் குழு நியூயார்க் நீதிமன்றத்தில் ”அதானி குழுமம் சில முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு இந்திய உயர் அதிகாரிகளிடம் சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 2000 கோடி) அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் கூறியுள்ளது.
அதானி நிறுவனம் அமெரிக்கா நிதிச் சந்தைகளின் நம்பகத்தன்மையை பணயமாக வைத்து அதானி நிறுவனம் லாபம் பார்க்க விரும்புகிறது.  சர்வதேச முதலீட்டாளர்கள் இதில் இருந்து பாதுகாப்பாக  இருக்க வேண்டும் என குற்றச்சாட்டை கூறி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

அதானி

இது குறித்து  அதானி குழும செய்தி தொடர்பாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அமெரிக்க நீதித்துறையிடம்  குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதி நிரபராதிதான்.  எங்கள் நிறுவனம் எப்போதும் வெளிப்படைத்தன்மையுடனும், ஒழுங்குமுறை நடவடிக்கைகளை பின்பற்றுவதிலும் எப்போதும் உறுதியாக உள்ளோம். எங்கள் நிறுவன பங்குகளை வைத்திருக்கும், பங்குதாரர்கள் மற்றும் எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அதானி குழுமம்,   அனைத்து சட்ட விதிமுறைகளுக்கும் முழுமையாக இணங்கியிருப்பதாக உறுதியளிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web