அதிர்ச்சி... ஆடுகளை நாய் கடித்ததால்... நாயைத் தூக்கிலிட்டு கொன்ற இளைஞர்கள்!

 
நாய்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு வாரசந்தை வளாகத்தில் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அதன்படி நாய் ஒன்று ஆடுகளை கடித்ததாகக் கூறி, சிலர் நாயை தூக்கிலிட்டு கொலை செய்துள்ளனர். இது குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள், விலங்குகள் ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

வெறி நாய் 
நாயை கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடமலைக்குண்டு கால்நடை உதவி மருத்துவர் சதீஷ்குமார் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த  வீடியோவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீஸ்

இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமிராஜ், முருகன், செல்வம், மலைச்சாமி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web