உரிமையாளரின் மகனை கடிக்க பாய்ந்த நாய்.. காப்பாற்ற வளர்ப்பு நாய் செய்த துணிகர செயல்!
சமீபகாலமாக நாய்கள் மனிதர்களைத் தாக்கும் செய்திகளை அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம். வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்கள் யாரையும் தாக்காதவாறு உரிமையாளர்கள் பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், அரசும் அறிவுறுத்தினர். எனினும், அது தொடர்பான தாக்குதல்கள் இன்னும் சில இடங்களில் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்நிலையில் வெளி நாட்டில் உள்ள சிறுவன் ஒருவன் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டு நாய் ஒன்று சிறுவனை தாக்க ஓடி வந்துள்ளது.
இந்த சிறுவன் வீட்டில் வளர்ந்த நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தான். எதிர் வீட்டு நாய் தனது உரிமையாளரின் மகனைக் கடிக்க வருவதைப் பார்த்த வளர்ப்பு நாய் உடனடியாக சிறுவனின் முன்னால் ஓடி நாயை விரட்டியடித்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் சிலர் வீட்டை பாதுகாப்பதற்காக மட்டுமே செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.
அப்படி வளர்க்கப்படும் நாய்கள்தான் இப்படி ஆக்ரோஷமாக செயல்படும். உண்மையில், நம் வீடுகளில் அன்புடனும் பாசத்துடனும் ஒன்றாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் இப்படி ஆக்ரோஷமாக நடந்து கொள்வதில்லை. சரியான நேரத்தில் உரிமையாளர்களை காப்பாற்றுவதில் வல்லவர்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!