நெகிழ்ச்சி... உறுப்பு தானம் செய்தவருக்கு வழி நெடுக மலர் தூவி மரியாதை ..!!

 
விபத்தில் உயிரிழந்தவர்களின் உறுப்பு தானம்
 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கோத்தகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 40). இவர் சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். இதனால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளை செயல் இழந்தது தெரியவந்தது. 

உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு வழிநெடுக நின்று மலர் தூவி மரியாதை  செலுத்திய அரசு மருத்துவர்கள்

இதனை உறுதி செய்து கொண்ட மருத்துவ குழுவினர் அவர்களது உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் எடுத்து கூறியதைத் தொடர்ந்து கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உடறவினர் முன் வந்தனர். அதன் அடிப்படையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவினர், உடல் உறுப்புக்களை தானமாக பெற்றனர். தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளில் முதலில் இருதயம் பிரத்தேயகமாக தயார் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் காவல் துறை பாதுகாப்புடன் சென்னையில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

மேலும் சிறுநீரகங்களில், ஒன்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை மருத்துவமனைக்கும், கல்லீரல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. மேலும் இரண்டு கண்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கண் பார்வை வேண்டி பதிவு செய்தவர்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்தவுடன் கோவிந்தராஜன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது பிரேத பரிசோதனை கூடம் அருகே மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், உடலுக்கு மலர் மாலை வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை அடுத்து பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து அமரர் உறுதிக்கு எடுத்துச் செல்கின்ற வரை, சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு இருபுறமும், அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அதேப்போல் பயின்று வருகின்ற மருத்துவ, செவிலிய மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று, இறந்தாலும், சில உயிர்களை வாழ வைக்கு உடல் உறுப்புகளை தானம் செய்த கோவிந்தராஜனின் உடலுக்கு மரியாதை செய்து, வழி அனுப்பி வைத்தனர்.

From around the web