இன்று ராம நவமி தினத்தில் ‘ரவி யோகம்’ பெற இதைப் பண்ணுங்க.. .வழிபடும் முறையும், பலன்களும்!

 
ராம நவமி
இன்று உலகம் முழுவதும் ராமர் பிறந்த நாளை முன்னிட்டு ராம நவமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் ஒன்பதாம் நாளில் ராம நவமி திருவிழா கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் சித்திரை மாதத்தில் வருகின்ற அமாவாசைக்கு அடுத்து வரும் நவமி திதியில் ராம நவமி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தான் ராமர் அவதரித்ததாக ஐதீகம். கடந்த சில ஆண்டுகள் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். இந்த ஆண்டு இன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது. 

இன்றைய ராம நவமி தினத்தில் விரதம் இருந்து ராம நாமத்தை உச்சரித்து வந்தால் ராமரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ராமாயண கதை, ராமரின் புகழை போற்றும் கதைகளையும் படிப்பதும், கேட்டதும் நற்பேறுகளை அள்ளித் தரும். 108, 1008 என்ற எண்ணிக்கையில்  ஸ்ரீ ராம ஜெயம் எழுதலாம். ஸ்ரீ ராம நாமத்தை இடைவிடாது ஜெபித்து கொண்டே இருக்க வேண்டும். 

ராம நவமி ஆஞ்சநேயர்

சைத்ரா மாதத்தின் நவமி திதி இன்று ஏப்ரல் 6ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு ராம நவமி அன்று, மிக முக்கியமான யோகம் உருவாகிறது, அது ரவி யோகமாக அதாவது சூரிய யோகத்தால் உருவாகிறது. இந்நேரத்தில் வழிபடுவதால் நோய்கள், தோஷங்கள், துன்பங்கள் நீங்கும்.

ராம நவமி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து  ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்திற்கு பூக்களை சூடி அலங்கரிக்க வேண்டும். ஸ்ரீராமருக்கு பிரியமான வெண் பொங்கல், பருப்பு வடை, நீர் மோர், பானகம்  செய்து படைக்கலாம். எதுவும் முடியாதவர்கள் எளிமையாக இரண்டு வாழைப்பழம், ஒரு டம்ளர் பால் அல்லது நீர்மோர் வைத்து ராமருக்கு படைக்கலாம். அப்படி படைக்கும் போது "ராம்... ராம்" என ராம மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.  

அயோத்தி ராமர்

நாள் முழுவதுமே ராம நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பது சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கும். அருகில் உள்ள ராமர் கோவில் அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.  மறக்காமல் துளசி மற்றும் தாமரை வாங்கிச் செல்லலாம்.

நீர் மோர், குடை, விசிறி போன்றவைகளை வாங்கி தானமாக கொடுக்கலாம். ராம நவமிக்கு பூஜை செய்யும் போதும், தானம் கொடுக்கும் போதும்  ராம நாமம் சொல்லிக் கொண்டே இருப்பது கூடுதல் பலன்களை தரும். பல நாட்களாக நடக்க வேண்டும் என நினைக்கும் விஷயம், நடக்கும் என நினைத்து நடக்காமல் தள்ளி போகும் கோரிக்கைகள் என எதுவாக இருந்தாலும்  ராம நவமி பூஜை செய்து, ராமரை வழிபட்டால்  நிச்சயம் ராமர் செவி சாய்த்து அவற்றை நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை. ராம்...ராம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web