இந்தப் பழங்களின் தோல தூக்கி எறியாதீங்க...

 
பழங்கள்

வீட்டில் பழங்கள்,காய்கறிகளைதோல் நீக்கி சாப்பிடுவதை தான் நாம் வழக்கமாக்கி வைத்திருக்கிறோம். ஆனால் தோலின் அடிப்பாகத்தில் தான் சத்துக்கள் நிரம்பியுள்ளன என்பதே நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழங்களில் தோல்கள் நீக்கி சாப்பிடலாம் என்பதால் தான்   அவற்றில் தோலை உரிக்கிறோம். பேரிக்காய் போன்ற பழங்களில் தோல்கள் கசக்கும் தன்மையைப் பெற்றுள்ளதால் அவற்றின் தோல்களை சீவிவிட்டு சாப்பிடுகிறோம்.  சில பழங்களில் கசப்பு தன்மை இருந்தாலும் கூட அவை தோலில் அதிக சத்துக்களை கொண்டுள்ளன. அடர் ஊதா நிறத்தில் இருக்கும் குளிர்கால பழமான பிளம்ஸ் என்பது பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு ஊட்டச்சத்து பழமாகும்.

பழங்கள்

இது . இந்த பழத்தின் தோல்கள் பால்பினால்களால் நிரம்பியுள்ளன.  பிளம்ஸில் நார்ச்சத்துகள் நிறைந்து காணப்படுவதால் இவை மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.  குளிர் பருவகாலங்களில் செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்ற பழமாக பிளம்ஸ் இருக்கும். அதே போல்  பேரிக்காய் தோலானது கசப்பு சுவையைக் கொண்டது. எனவே யாரும் அதன் தோலை விரும்புவதில்லை. ஆனால் பேரிக்காயின் தோலில் அதிகமான அளவில் நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து குடலின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலை சரி செய்கிறது, இதனால் குடல் ஆரோக்கியம் அதிகமாவதற்கு இது உதவுகிறது. இனி பேரிக்காயைத் தோலுடன் சாப்பிட முயற்சிக்கவும்.
 ஆப்பிளின் தோலில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இது திசுக்களில் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் ட்ரைடர்பெனாய்டு என்ற கலவையானது ஆப்பிள் தோலில் உள்ளது.

எப்போதும் இளமையா இருக்க இந்த பழங்கள் முழு பலன் தரும்!

சப்போட்டாவை நன்கு கழுவிய பிறகு அப்படியே சாப்பிடலாம். அதன் தோல்களை நீக்க வேண்டிய அவசியமில்லை. மாம்பழத்தின் தோலில் கொழுப்பை எரிக்க உதவும் செல்கள் உள்ளன, மேலும் மாம்பழத்தின் தோலில்  ஆரோக்கிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய்களை எதிர்த்து போராடுவதற்கு உதவுகின்றன. மாம்பழத்தின் தோலை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்ணலாம்.  கிவி   பழத்தின் தோலில் நார்ச்சத்து, ஃபோலேட், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.    இந்த பழங்கள் யாவும் தோலில் அதிக சத்துக்களை கொண்டுள்ளதால் இவற்றை தோலுடன் உண்பதே உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web