மழைநேரங்களில் இதையெல்லாம் செய்யாதீங்க.. மின்சார வாரியம் எச்சரிக்கை...!!
தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலங்களில் பொதுவாக மின் விபத்துகள் அதிகம் ஏற்படுவது வாடிக்கை. இதனை தடுக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Tips to Prevent Accidents & Fires#TANGEDCO #TNEB #SafetyFirst #ElectricalSafety #MonsoonSafety #Chennairains pic.twitter.com/CErtLFJr6G
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) November 14, 2023
மழைக்காலத்தில் மின் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் . இதனால் அதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் தெரிவித்துள்ளது. மழைக்காலங்களில் மின் விபத்துகளை எவ்வாறு தவிர்ப்பது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் ’கீழே விழுந்த மின் கம்பிகள்/கம்பங்கள் அருகில் செல்லக்கூடாது.
சாலைகளில் அதனை காணும் பட்சத்தில் எச்சரிக்கை அடையாளம் செய்து, மின்னகம் எண் 94987 94987 என்ற எண்ணில் அழைக்கலாம்.
மின்கம்பம்/மின்மாற்றி/பகிர்மான பெட்டி அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
தரமற்ற பிவிசி வயரைக் கொண்டு வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள கொட்டகைக்கோ/கழிவறைக்கோ மின் இணைப்பு கொடுக்க வேண்டாம்.
மாடிகளில் துணி உலர வைக்கும்போது, மின்கம்பி மேலேயும் அருகிலும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு காய வைக்கவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!