திமுக எம்.எல்.ஏ மகன், மருமகளுக்கு பிப்ரவரி 9 வரை நீதிமன்றக் காவல்... !

 
எம்.எல்.ஏ
சிறுமி சித்திரவதை தொடர்பாக கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகளை போலீசார் இன்று காலை சென்னை அழைத்து வந்தனர். உடனடியாக  சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி முன் ஆஜர்படுத்திய போது நீதிபதி  ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினாவை பிப்ரவரி 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும்  சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வசித்து வருபவர் 17 வயது சிறுமி . இவர்  பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா வீட்டில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் எம்.எல்.ஏ. மகன் மற்றும் மருமகள் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். பணியில் இருந்த போது  தன்னை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதாகவும்,   சூடு வைத்து தாக்கியதாகவும் கூறியிருந்தது பெரும்   அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பட்டியலினத்தைச் சேர்ந்த இந்த  சிறுமியின்  குடும்ப சூழ்நிலை காரணமாக  இடைத்தரகர் மூலம் எம்.எல்.ஏ . மகன் வீட்டில் பணி கிடைத்தது.

dmk mla

இவரது தாயார் சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணி செய்து வருகிறார்.  12 ம்வகுப்பு படித்து முடித்த இந்த சிறுமி  கடந்த 7 மாத காலமாக ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் ரேகாவை அடித்து துன்புறுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டலும் விடுத்துள்ளனர்.  சிறுமி பொங்கலுக்காக  தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.  மகளின் உடலில் இருந்த காயங்களை பார்த்த செல்வி, அது குறித்து காரணம் கேட்கவும், ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் அடித்து துன்புறுத்தியதை தாயிடம் கதறி அழுதபடி சொல்லி இருக்கிறார்.மறுநாள் காலை, தனது மகளின் காயங்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக  உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு தாய் கூட்டிச் சென்றனர். அங்கு சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று மதிவாணன் அவரது மனைவி மெர்லினாமீது புகார் அளிக்கப்பட்டது.

dmk mla
இது குறித்து சிறுமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும்  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்து வந்தனர். இதன் பேரில்  திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ மற்றும் மருமகள் மார்லினா மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்ட பிரிவு  உட்பட  5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி ஆபாசமாக பேசுதல், குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் உட்பட  5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில்  இருவரும ஆந்திராவில் பதுங்கி இருந்தனர். இவர்களை  தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்  புகார் கூறிய இளம்பெண்ணுக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார்   நேரில் வருமாறு  அறிவுறுத்தியிருந்தனர். இன்று  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web