அதிரடி சரவெடி... தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்... முன்பதிவு தொடக்கம்.... !!
தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை மிக சிறப்பாகக் கொண்டாடும் வகையில் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சொந்த ஊருக்கு செல்ல லட்சக்கணக்கானோர் திட்டமிட்டு வருகின்றனர். தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகளும், தெற்கு ரயில்வே சார்பாக ரயில்களும் இயக்கப்பட உள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ரயில் நாளை 10 மற்றும் 12ம் தேதிகளில் இரவு 11.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் பிற்பகல் 12:30 மணிக்கு தூத்துக்குடியை சென்று சேருகிறது.
இதே போல மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 11 மற்றும் 13ம் தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு அதிகாலை 4 . 45 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூர் , தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக தூத்துக்குடி சென்று சேருகிறது. இந்த ரயிலில் 3 ஏசி பெட்டியும், 10 இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியும், 5 முன்பதிவு இல்லாத பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.
இதே போல தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு வந்தே பாரத் ரயிலிலும் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு 10,11, 13, 14 தேதிகளில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.45மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நெல்லையை சென்று சேர்கிறது.இதே போல திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும் மறுமார்க்கமாக 10, 11, 13, 14 தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11:15 மணிக்கு சென்னையை வந்து சேருகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!