குட் நியூஸ்... ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்!

 
ரேஷன்

  
 
தீபாவளி பண்டிகை  அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.  தீபாவளி என்றாலே புத்தாடையும், பட்டாசுகளும், பட்சணங்களும் தான்.  இதனையடுத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தீபாவளி போனஸ் தொகை வழங்கிட முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.  

ரேஷன்


அதன்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், டாஸ்மாக் என ஒவ்வொரு துறைகளும் ஊழியர்களுக்கு போனஸ் தொகையை அறிவித்து வருகின்றன.அந்த வரிசையில்  நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம்  ரேஷன்கடை ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை போனஸ் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை


 மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த வாரம் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசும் உடனடியாக தனது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரை நிலுவை தொகையாக பணமில்லா பரிவர்த்தனை முறையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web