இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்!

 
இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்!


தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்!


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்!


இத்துடன் தென்மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் உள்மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்!


சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். தமிழகத்தில் மழை அளவை பொறுத்தவரை அதிபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web