அதிருப்தி வீடியோ.. கிரிக்கெட் பேட்கள் விற்பனைக்கு... பாகிஸ்தான் படுதோல்வி... ரசிகர்கள் விரக்தி!

டி20 தொடர் போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர். அந்த வகையில் நியூசிலாந்துக்கு எதிராக வெளியூர் மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகளில் பாகிஸ்தான் அணி 4-1 என படுதோல்வி அடைந்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.
— Out Of Context Cricket (@GemsOfCricket) March 28, 2025
அணியின் தொடர்ச்சியான தோல்விகளில் விரக்தியடைந்த ஒரு ரசிகர், வெல்லிங்டனில் உள்ள ஸ்கை ஸ்டேடியத்தில் “Cricket bats for sale – barely used. Call Pakistan Cricket Team” (கிரிக்கெட் பேட்கள் விற்பனைக்கு – பயன்படுத்தியதெல்லாம் இல்லை போல… தொடர்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!) என்ற பிளகார்டை தூக்கிக்காட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த காட்சிகள் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டநிலையில் ரசிகர்கள் எவ்வளவு விரக்தியில் உள்ளனர் என்பதை தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் அணியின் தற்போதைய தோல்விகள் அணியின் மேலாளர்களுக்கும், வீரர்களுக்கும் பெரிய சவாலாக மாறியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!