டெலிவரி ஊழியர்கள் போல் வேடமணிந்து போதைப்பொருள் சப்ளை.. அடுத்தடுத்து சிக்கிய நபர்கள்!

 
அபித்ராஜ் - ஸ்டாலின் ராஜ்

சென்னை, மவுண்ட் ரோடு மசூதி பின்புறம் உள்ள தனியார் கார் ஷோரூம் அருகே, மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக, சென்னை, வடக்கு கடற்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. துணை கமிஷனர் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார், மவுண்ட் ரோடு மசூதி அருகே ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

போதைப்பொருள்

அப்போது, ​​மகேஷ் (30), பாரூக் (29) ஆகியோர் ஸ்விக்கி மற்றும் போர்ட்டர் ஆப் டெலிவரி ஊழியர்கள் போல் வேடமணிந்து தடை செய்யப்பட்ட மெத்தாம்பெட்டமைன் மருந்தை விற்பனை செய்ய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப் பொருள் தருவதாக முபாஷிரிடம் இருந்து ரூ.500 பெற்று மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்நிலையில் முக்கிய நபரான முபாஷிரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கைதான 2 பேரிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12 கிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் 27 போதைப்பொருள் மாதிரிகளை பறிமுதல் செய்த பி1 வடக்கு கடற்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதேபோல், அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், அரும்பாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவில் மெத்தம்பெட்டமைன் விற்பனைக்காக வைத்திருந்த அபித்ராஜ் (29), ஸ்டாலின் ராஜ் ஆகிய இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். 

கைது

அபித்ராஜிடம் இருந்து 4.46 கிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அபித்ராஜ் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web