பக்தர்கள் மகிழ்ச்சி! மதுரையிலிருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவை!

 
பக்தர்கள் மகிழ்ச்சி! மதுரையிலிருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவை!


தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைகளை பொறுத்து உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் மகிழ்ச்சி! மதுரையிலிருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவை!


அந்த வகையில் தற்போது மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், டில்லிக்கும் தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் மதுரையில் இருந்து துபாய்க்கு வாரத்தில் மூன்று நாட்கள் வெளிநாட்டு விமான சேவையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பக்தர்கள் மகிழ்ச்சி! மதுரையிலிருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவை!


இந்நிலையில்,பக்தர்களின் கோரிக்கையின் படி மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை இயக்கப்பட உள்ளது. தனியார் விமான நிறுவனம் நவம்பர் 19 முதல் மதுரையில் இருந்து தினமும் மதியம் 3 மணிக்கு விமானம் புறப்படும். மாலை 4.20 மணிக்கு திருப்பதி சென்றடையும் இந்த விமானம் மீண்டும் மாலை 4.40 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு, 6.04 மணிக்கு மதுரையை வந்தடையும்.


இதற்கான முன்பதிவு சேவைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து திருப்பதிக்கு ரூபாய் 3,500 கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த விமான சேவைக்கு பெருமாள் பக்தர்கள் பெரும் வரவேற்பும் உற்சாகமும் அளித்துள்ளனர்.

From around the web