நடிகை சமந்தாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்? கையில் வைர மோதிரம்!

 
 சமந்தா

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா.  இவருக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில்  ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். 

 சமந்தா

நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா,  கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இந்நிலையில்  சமந்தா நடிப்பில் சமீபத்தில் 'சிட்டால் ஹனி பன்னி' என்ற வெப் சீரிஸ் வெளியாகி  பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெப் சீரிஸை ராஜ் நிடிமோர் இயக்கியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இயக்குனர் ராஜ் நிடிமோர் சமந்தாவுடன் கைகோர்த்து வந்தார். கை கோர்த்தபடி இருப்பதை பார்த்த ரசிகர்களோ இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர், நடிகை சமந்தா மீண்டும் காதலில் விழுந்துவிட்டார் எனக் கூறத் தொடங்கிவிட்டனர். 

சமந்தா

இந்நிலையில், நடிகை சமந்தா கையில் வைர மோதிரத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. இந்த மோதிரத்தை பார்த்த ரசிகர்கள், சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் எனக் கூறி வருகின்றனர்.  இது உண்மையா இல்லை வதந்தியா என்பது உறுதியாக கூற வேண்டும் எனில்  சமந்தா அல்லது ராஜ் நிடிமோரு விளக்கம் அளித்தால் மட்டுமே இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால் இதுவரை   எந்த விதமான பதில்களும் வரவில்லை அதனால் ரசிகர்கள் எண்ணத்துக்கே விட்டுவிடலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web