தெறி மாஸ்... தனுஷ் மகன் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்!

 
தனுஷ்

 'வொய் திஸ் கொலவெறிடி...’ என்கிற ரீதியில் இன்னொரு தெறி மாஸ் பாடலுக்கு ரசிகர்கள் காத்திருக்க துவங்கி விட்டார்கள். நடிகர் தனுஷ் மகன் தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ திரைப்படத்தின் முதல் பாடலை தனுஷ் மகன் யாத்ரா எழுதியிருக்கிறார்.

தனுஷ்

'பா.பாண்டி’, ‘ராயன்’ படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் என இளம் தலைமுறையினர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இதில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இதன் முதல் சிங்கிள் இந்த மாதம் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. 'கோல்டன் ஸ்பேரோ’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் பாடலில் நடிகை பிரியங்கா மோகன் நடனம் ஆடியிருக்கிறார்.

அதிர்ச்சி!தனுஷ் படம் திரையிடப்பட்ட தியேட்டரில் குண்டு வீச்சு!

இந்தப் பாடலை வெளியாவதற்கு முன்பே பார்த்துள்ள நடிகர் எஸ்.ஜே. சூர்யா, ‘பாடல் ரொம்பவே கியூட்டாக உள்ளது. நடிகை பிரியங்கா மோகன் யங் & க்யூட் மாமியாக ஈர்த்துள்ளார். பாடல் ஸ்டைலிஷாக உள்ளது. இந்தப் பாடலை தனுஷ் சாரின் மகன் யாத்ரா தனுஷ் எழுதியிருக்கிறார்’ என சொல்லியிருக்கிறார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web