திருமண விழாவில் அருகருகே தனுஷ், நயன்தாரா !
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனுஷ் மீது சர்ச்சை கருத்து ஒன்றை வெளியிட்ட்டு இருந்தார். அந்த அறிக்கை தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் தனுஷ் நயன்தாரா இருவரும் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாரா பற்றிய ஆவணப் படம் சமீபத்தில் 'Nayanthara Beyond The Fairy Tale' நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணப் படத்தில் 'நானும் ரவுடிதான்' படத்தின் காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காட்சிகளுக்கான என்ஓசி சான்றிதழை அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் வழங்கவில்லை. அதையும் மீறி சில காட்சிகள் இடம் பெற்றிருந்ததாகத் தெரிகிறது. இதனை எதிர்த்து நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். நயன்தாரா, தனுஷ் மீது கண்டனம் தெரிவித்து காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். நடிகர் தனுஷ் இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தை 'Dawn Pictures' நிறுவனம் சார்பில் ஆகாஷ் தயாரித்துள்ளார். இவருக்கும் தரணீஸ்வரி என்பவருக்கும் திருமணம் இன்று நடைபெற்றது. இவர் மு.க.முத்துவின் பேத்தியாவார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் இந்த திருமண நிகழ்வு நடைபெற்றது. இத்திருமணத்தில் மு.க.ஸ்டாலின் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சர்கள் மற்றும் நடிகர்கள் விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், இயக்குநர் அட்லீ, இசையமைப்பாளர் அனிருத், லைகா தமிழ்குமரன், இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இத்திருமண விழாவில் ஒரே வரிசையில் தனுஷ் - நயன்தாரா: இருவரும் காப்புரிமை பிரச்சினைக்கு பிறகு கலந்து கொண்டுள்ளனர். ஒரே வரிசையில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் பாராமுகத்துடன் இருந்தது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!