தனுஷ், ஐஸ்வர்யா சட்டப்பூர்வமாக பிரிந்தனர்... நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பு!

 
தனுஷ் ஐஸ்வர்யா
 


 

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் 2022ம் ஆண்டு பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.  இதனையடுத்து இருவரும்   பிரிந்து வாழ்ந்து வந்த  நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

தனுஷ் ஐஸ்வர்யா

வழக்கு சம்பந்தமாக  ஐஸ்வர்யா ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த நிலையில், நவம்பர் 21ம் தேதி நடிகர் தனுஷ் விசாரணைக்கு ஆஜரானார். நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தனுஷ் ஐஸ்வர்யா
இந்நிலையில்,  நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. திருமண பந்தத்தில் இருந்து பிரிவதில் உறுதியாக இருப்பதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் தெரிவித்து இருந்தனர். இதன் காரணமாக இருவருக்கும் விவாகரத்து வழங்கி  சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது .  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

From around the web