உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக் கடன்... விநோத வழிபாடு!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா மார்ச்15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குதிரை, யானை, காமதேனு, ரிஷபம் என தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் நகர் வீதி உலா வந்தது.
நேற்று நள்ளிரவு முதல் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தி வருகின்றனர். பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது உடல் முழுவதும் களிமண் சேறுபூசிக் கொண்டு, கையில் வேப்பிலையுடன் கோயிலை வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
11 நாட்கள் விரதமிருக்கும் பக்தர்கள், கமுதி ஊரணி கரையில் உள்ள களிமண் சேற்றை தலை முதல் கால் வரை பூசி முத்துமாரியம்மன் கோயில் சென்று வழிபட்டு செல்கின்றனர். இந்த விநோத வழிபாடு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!