3 வது முறையாக தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்பு!

 
தேவேந்திர பட்னாவிஸ்


 மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக 3 வது முறையாக தேவேந்திர பட்னாவிஸ்  பதவியேற்றுக் கொண்டார். இந்த  பதவியேற்பு விழா தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் இன்று டிசம்பர் 5ம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு  நடைபெற்றது. விழா மேடைக்கு பிரதமர் மோடி வந்ததும், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதையடுத்து, தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசுக்கு பூங்கொத்துக் கொடுத்து ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார்.  அவரை தொடர்ந்து  சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்றார்.   

தேவேந்திர பட்னாவிஸ்


பதவியேற்பு விழாவில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுஹான், நிர்மலா சீதாராமன், மாநில முதல்வர்கள் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, யோகி ஆதித்யா நாத், பூபேந்திர படேல், புஷ்கர் சிங் தாமி, மோகன் சரண் மாஞ்சி, பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பதவியேற்பு விழாவில் பாலிவுட் திரை பிரபலங்களான ஷாருக்கான், சல்மான் கான், ரன்பிர் கபூர், ரன்வீர் சிங், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உட்பட பல பிரபலங்கள்  கலந்து கொண்டனர்.   

தேவேந்திர பட்னாவிஸ்


தேவேந்திர ஃபட்னாவிஸ் (54) இளம் வயதில், தனது தந்தையை சிறையில் அடைத்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரைக் கொண்ட (இந்திரா கான்வென்ட்) பள்ளியில் படிப்பைத் தொடர மறுத்து விட்டார். அதன் பிறகு சரஸ்வதி வித்யாலாயாவில் சேர்ந்து படித்தார். இதுவே அவரது அரசியல் பயணத்துக்கு தொடக்கமாக அமைந்ததுடன் பணக்கார மாநிலத்தின் முதல்வர் பதவியை எட்டிப் பிடிக்கவும் அடித்தளமாக அமைந்தது.  ஃபட்னாவிஸ் 27 வயதில் நாக்பூரின் இளைய மேயராகவும், பின்னர் மகாராஷ்டிராவின் 2 வது பிராமண முதல்வராகவும் ஆனார்.  வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பிரதமர்  மோடியின் 'ஏக் ஹைன் தோ சேப் ஹெய்ன்'   முழக்கத்தை  பயன்படுத்தினார்.  நீர்ப்பாசன ஊழலை அம்பலப்படுத்தியதன் மூலம், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தனது உறுதிப்பாட்டை பட்னாவிஸ் வெளிப்படுத்தியது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web