கொரோனாவை விட வேகமாக பரவும் டெங்கு! எச்சரிக்கை!

 
கொரோனாவை விட வேகமாக பரவும் டெங்கு! எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடித்திட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

கொரோனாவை விட வேகமாக பரவும் டெங்கு! எச்சரிக்கை!


ஆனால் தமிழகத்தில் சமீபமாக கொரோனாவை காட்டிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது . அதிலும் குறிப்பாக சேலம், திருச்சி, கடலூா் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .

கொரோனாவை விட வேகமாக பரவும் டெங்கு! எச்சரிக்கை!

கடந்த சில நாள்களாக கடலூா், சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் சுமார் 20 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். தற்போது மாநிலம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 375 பேர் .


அடுத்த 3 மாதங்களுக்கு தமிழக மக்கள் டெங்கு பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். தங்களது வசிப்பிடங்களைச் சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் . மழைக்காலமாக இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web