தீபாவளி சரவெடி! தொலைக்காட்சியில் டாக்டர் திரைப்படம்!

 
தீபாவளி சரவெடி! தொலைக்காட்சியில் டாக்டர் திரைப்படம்!


தீபாவளி நவம்பர் 4 ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு சன் டிவி சிறப்பு நிகழ்ச்சிகளில் டாக்டர் திரைப்படம் ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் அக். 9 ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தீபாவளி சரவெடி! தொலைக்காட்சியில் டாக்டர் திரைப்படம்!

இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் தற்போதும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்களில் அதிகம் வசூலை அள்ளிக் குவித்த படம் என்ற பெருமையை டாக்டர் திரைப்படம் பெற்றுள்ளது.இப்டத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமை சன் டிவிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி சரவெடி! தொலைக்காட்சியில் டாக்டர் திரைப்படம்!

இந்நிலையில் தீபாவளிக்கு சன் டிவியில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ஒளிபரப்பாகலாம் எனவும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டாக்டர் திரைப்படம் டிவியில் ஒளிபரப்பாக இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நேரத்திலேயே அமேசான் பிரைமில் வெளியானது போல் டாக்டர் படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web