பத்திரம் மக்களே... ஏப்.18 வரை இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்!

பத்திரமா இருங்க மக்களே... பகல் நேரத்தில் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவர்களை தனியே வெளியே அனுப்பாதீங்க. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று ஏப்ரல் 15ம் தேதி முதல் ஏப்ரல் 18ம் தேதி வரையில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஏப்ரல் 14ம் தேதி காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 38.6 டிகிரி செல்சியஸ் திருத்தணியில் பதிவாகியுள்ளது. அதற்கடுத்தபடியாக, மதுரை விமான நிலையத்தில் 38.5 டிகிரி செல்சியஸ், ஈரோடு 38.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அதிகபட்ச வெப்பநிலை 37 - 38 டிகிரி செல்சியஸை ஒட்டி நிலவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி நிலவும்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில், புதுவை, காரைக்காலிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!