பரந்தூர் விமானநிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!

 
பரந்தூர்

 தமிழகத்தில் பரந்தூரில் புதிய விமான நிலையம் கட்டுமானப் பணிகளுக்காக   நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதற்காக, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள மொத்தம் 445 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சென்னை அருகே பரந்தூரில் மிகப்பெரிய விமான நிலையம் கட்டப்படும் என்பதை உறுதி செய்துள்ளது.  

பரந்தூர்
நிலம் கையகப்படுத்தப்படவுள்ள பகுதிகளில் வாழும் நில உரிமையாளர்களுக்கு, தங்கள் நிலம் குறித்து கருத்து அல்லது எதிர்ப்பு இருந்தால், அதை ஒரு மாதத்திற்குள் அரசிற்கு தெரியப்படுத்தலாம்.  இதற்கான உரிமைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பாக நில உரிமையாளர்களுக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது, எனவே இது அவசர நிலமாற்றமாக அமையப் போவதில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

பரந்தூர்


பரந்தூர் விமான நிலையம் மிகப்பெரிய பன்னாட்டு திட்டமாக கருதப்படுவதால், இதன் மூலம் இந்தப் பகுதி குறுகிய காலத்தில் இமாலய வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இருப்பினும், இந்த நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கையில் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் தொடர்பான கருத்துக்களை அரசாங்கம் கவனித்துக் கொள்ளும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web