அதிர்ச்சி... தாய்க்குப் பதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மகள்!

அப்போது மாணவி ஒருவா் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி பொதுத்தேர்வு எழுத வந்திருந்தாா். அவா் மீது சந்தேகமடைந்த கண்காணிப்பாளா், குறிப்பிட்ட மாணவியிடம் மாஸ்க்கை அகற்றுமாறு கூறி, நுழைவுச் சீட்டு மற்றும் வருகைப் பதிவு குறிப்பேட்டில் உள்ள புகைப்படங்களை ஒப்பிட்டுப் பாா்த்தபோது, புகைப்படங்கள் மாறுபட்டிருந்தது தெரிய வந்தது.
உடனடியாக மாணவி தோ்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து செல்லப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலா் (தனித் தோ்வு) முத்துசாமி, ஆகியோரால் விசாரிக்கப்பட்டாா்.
மாவட்ட கல்வி அலுவலரின் விசாரணையில், மாணவி நாகை வெளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்வாம்பிகை என்பதும், அவா் தனது தாய் சுகந்திக்காக, ஆள்மாறாட்டம் செய்து பொதுத்தேர்வு எழுத வந்திருந்ததும் தெரிய வந்தது.
இதே போல கடந்த மார்ச் 28ம் தேதி நடந்து முடிந்த தமிழ் தோ்வையும், தனது தாயாருக்காக இப்படி மாஸ்க் அணிந்து மாணவி செல்வாம்பிகை எழுதியதும் தெரிய வந்துள்ளது. ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவி செல்வாம்பிகையை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!