காதலனுடன் எஸ்கேப் ஆன மகள்.. ஆத்திரத்தில் கோடாரியால் கூறு போட்ட தந்தை.. அதிர்ச்சி வீடியோ!
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் வசிப்பவர் நயீம் கான். இவருக்கு திருமணமாகி மனைவியும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். நயீமின் 17 வயது மகள் உள்ளூர் இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆர்வம் காட்டாத நயீம் கான் தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
उत्तर प्रदेश के जिला बहराइच में पिता नईम ने 18 वर्षीय बेटी खुशबू की हत्या कर दी। गंडासे से उसकी गर्दन, दोनों हाथ और पैर काट दिए।
— Satyaagrah (@satyaagrahindia) September 2, 2024
बताया जा रहा है कि प्रेम-प्रसंग में खुशबू कुछ दिन पहले एक लड़के के साथ चली गई थी। पुलिस ने लड़की बरामद करके पिता को सौंप दी थी। तभी से विवाद था। pic.twitter.com/gRjCBoclnc
இந்நிலையில், நயீமின் மகள் காதலனுடன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. மகளைக் கண்டுபிடித்த தந்தை அவளை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கி வெட்டினார். மகளின் கை, கால்களை கோடரியால் வெட்டிய தந்தை, மகளின் உடல் அருகே அமர்ந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் சிறுமியின் தந்தையை கைது செய்தனர். விசாரணையில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளைக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!