வைரல் வீடியோ... ஓணப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட கலெக்டர்!!

 
அப்சானா பர்வீன்

இன்று  இந்தியா முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர், முதல்வர் உட்பட தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   ஓணம் பண்டிகை கேரளாவில்  அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் வரை தொடர்ந்து  10 நாள் அரசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  கேரளாவின் கொல்லம் மாநிலத்தில் நடந்த கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஓணம் பண்டிகையில் மாவட்ட கலெக்டர் அப்சனா பர்வீன் உற்சாகத்துடன் நடனமாடுகிறார். இது குறித்த  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


ஓணம் பாட்டுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கலெக்டரை கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.  இந்த வீடியோவில் “முதலில் ஓணபாட்டுக்கு அழகாக நடனமாடிய கலெக்டர், பின் தடம் கையில் கூலிங் கிளாஸ் எடுத்துக்கொண்டு சினிமா பாடலுக்கு சூப்பரான நடனம் ஆடினார்.

ஓணம்

இவர் நடனம் ஆடியதை பார்த்த அங்கிருந்த அனைவரயும் தங்களுடைய கைகளை தட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இது குறித்த புகைப்படங்கள்,  வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது  அப்சானா பர்வீன்  2021ம் ஆண்டு கொல்லம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார். 2014 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அப்சானா, பீகாரில் உள்ள முசாஃபிர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web