அன்றாடம் உபயோகப்படுத்தும் மருந்துகளின் விலை 12% உயர்வு? மத்திய அரசு விளக்கம்!
இந்தியாவில் 500 அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதம் உயரும் என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் நிராகரித்துள்ளது. இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த கமிஷன் ஒவ்வொரு ஆண்டும் சந்தை விலையை சமாளிக்க குறைந்தபட்ச விலை உயர்வை அறிவிக்கிறது.
உதாரணமாக, இந்த ஆண்டு ரூ.90 முதல் ரூ.261 வரையிலான விலையில் உள்ள மருந்துகளுக்கு 0.00551 சதவீதம் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 500க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 500 அத்தியாவசிய மருந்துகளின் விலை கடுமையாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீண்டகாலமாக மருந்தைப் பயன்படுத்துபவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால், இந்தத் தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது. 12 சதவீதம் விலை உயர்வு தவறானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வு 0.1 பைசாவிற்கும் குறைவாக இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்துகளை வாங்குபவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!