ரூ1 சட்டை... அதிகாலை முதலே கடையில் குவியத் தொடங்கிய வாடிக்கையாளர்கள்!
தீபாவளி நெருங்கி கொண்டிருப்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் நகைக்கடைகள், துணிக்கடைகளில் தீபாவளி ஆபர் களைகட்டத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஈரோட்டில் முதலில் வரும் 1,500 நபர்களுக்கு ரூ1க்கு சட்டை என விளம்பரம் செய்யப்பட்டதைப் பார்த்து ஏராளமான இளைஞர்கள் கடைமுன் குவிந்தனர்.அதேநேரம் கடையை மூடிவிட்டு, செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு கடை உரிமையாளர் தப்பியோடிவிட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
ஈரோடு காந்தி சாலையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் 1 ரூபாய்க்கு சட்டை விற்பனை செய்யப்படும் என இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதனை நம்பி கடை திறப்பதற்கு முன்பாகவே அதிகாலை முதலே ஏராளமான இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கடைமுன் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஆனால் நண்பகல் ஆகியும் ஏனோ கடை திறக்கப்படவில்லை. இதனை அடுத்து கடையின் உரிமையாளரை அங்கு திரண்டு இருந்த இளைஞர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது, அவரது மொபைல் நம்பர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
ஆடை வாங்க காலை முதலே காத்திருந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பதாகவும் ஆனால் கடை திறக்கப்படவில்லை எனவும் , சமூக வலைத்தளங்களில் இதுபோல் விளம்பரம் செய்து கடை உரிமையாளர்கள் தங்களை ஏமாற்றுவதாக அங்கு திரண்டு இருந்த இளைஞர்கள் குற்றம் சாட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை முன்பாக சிறிது நேரத்தில் போலீஸார் விரைந்து வந்து, இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினர். முன் அனுமதி இன்றி இதுபோன்ற சலுகை அறிவித்து வெளியிட்டு இருப்பதாகவும் போலீஸார் இளைஞர்களிடம் தெரிவித்துள்ளனர். முன் அனுமதி பெறாமல் சலுகைகள் அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!