கொடூரம்... சர்ச் வளாகத்தில் கார் மோதி 2 வயது சிறுமி மரணம்!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இரிஞ்சாலக்குடா சேலூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் பிரார்த்தனைக்காக பலரும் கூடியிருந்த போது, சர்ச் வளாகத்தில் கார் மோதியதில் இரண்டு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இரிஞ்சாலக்குடா சேலூர் பகுதியில் வசித்து வருபவர் பினி. இவரது மனைவி ஜினி. இந்த தம்பதியருக்கு 2 வயதில் அய்ரின் என்ற மகள் இருந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தனது குழந்தை அய்ரினை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு பிரார்த்தனைக்காக அந்த பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு தாய் சென்றிருந்தார்.
ஆட்டோ டிரைவரிடம் ஜினி பணம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, குழந்தை தேவாலயத்தை நோக்கி ஓடியது. நோய்வாய்ப்பட்ட ஒரு பக்தரை தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருந்த கார், குழந்தை அய்ரின் மீது மோதி நசுக்கியது.
அய்ரின் உடனடியாக இரிஞ்சாலக்குடாவில் உள்ள கூட்டுறவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தேவாலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை விசேஷ கூட்டுப் பிரார்த்தனைக்கு பலரும் கூடியிருந்த நிலையில், 2 வயது குழந்தை அய்ரின் மீது கார் மோதியதில் உயிரிழந்த சம்பவம் தேவாலயத்தில் கூடியிருந்த பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!